
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை (செப். 12) பதவியேற்க உள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் பதவி விலகியதை தொடர்ந்து, அப்பதவிக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அபார வெற்றி பெற்றார்.