
2013 ஆம் ஆண்டு வெளியான தி கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு தற்போது ஏலத்திற்கு வருகிறது. ரோட் தீவில் உள்ள பர்ரில்வில்லே நகரத்தில் அமைந்துள்ள இந்த வீடு, அமானுஷ்ய வீடாக கருதப்பட்டு அதனை ஆய்வாளர்கள், பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர்.
பெரான் குடும்பத்தினர் வசித்து வந்த இந்த வீடு, 2013 ஆம் ஆண்டு திகிலூட்டும் படத்திற்காக பயன்படுத்தப்பட்டது. இந்த வீட்டில் பெரான் குடும்பம் குடிபுகுந்தபோது பல்வேறு குழப்பமான நிகழ்வுகளை அனுபவித்ததாக கூறியிருந்தனர். இதனையடுத்து அந்த வீடு தி கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றது.
அதன் பின்னர் இந்த வீடு மேலும் பிரபலம் அடைந்தது. இப்போது இந்த சொத்து சில நிதி சிக்கல்களில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இதன் உரிமையாளர்கள் இதனை விற்க முன்வந்துள்ளனர்.
கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஜாக்குலின் என்பவர் இந்த வீட்டை வாங்கி ஒரு அமானுஷ்ய பேய் சுற்றுலா வணிகமாக மாற்றினார். ஆர்வமுள்ளவர்கள் இந்த இடத்தில் இரவு முழுவதும் தங்க அனுமதிக்கப்பட்டது.
இதனை அடுத்து அந்த அமானுஷ்ய சுற்றுலா நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தபோதிலும் பல்வேறு சர்ச்சைகளில் அந்த சொத்து சிக்கியதை அடுத்து அதிகாரிகள் பொழுதுபோக்கு உரிமத்தை ரத்து செய்தனர்.
ஆனால் தனது உரிமத்தை இழந்தபோதிலும் ஜாக்குலின் தொடர்ந்து நடத்துவதாக குறிப்பிட்டு பலரிடம் பல்லாயிரக்கணக்கான பணத்தை பெற்றிருக்கிறார். அந்த அமானுஷ்ய வீடு மேலும் மேலும் சர்ச்சையில் சிக்கியது. இப்படி இருக்கையில் இந்த வீடு விற்பனைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!