
சென்னை: கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்ததாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, திமுக பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், சென்னை அயனாவரத்தை சேர்ந்த கல்லுாரி மாணவர் நிதின்சாய் என்பவரை காரை ஏற்றி கொலை செய்ததாக திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக நிர்வாகியும், மாநகராட்சி மண்டலத் தலைவருமான கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்துரு சரண் அடைந்தார்.