
இந்தியாவில் 2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு ஸ்ரேயஸ் ஐயர் ஒன்றரை வருடமாக இந்திய அணியில் புறக்கணிப்பட்டார்.
ஆனால், அதே காலகட்டத்தில் ஐ.பி.எல் உட்பட அனைத்து உள்ளூர் கிரிக்கெட் கோப்பைகளையும் வென்று, 2025 சாம்பியன்ஸ் டிராபியில் மீண்டும் அணிக்குள் நுழைந்து சாம்பியனானார்.
இருப்பினும், நடந்து முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் நடப்பு ஆசியக் கோப்பை தொடருக்கான அணியில் ஸ்ரேயஸ் ஐயர் மீண்டும் புறக்கணிக்கப்பட்டார்.
அடுத்து வரவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 2023-ல் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு கால் தற்காலிகமாகச் செயலிழந்ததையும், அப்போது தான் கடந்துவந்த வலியையும் பற்றி ஸ்ரேயஸ் ஐயர் மனம் திறந்திருக்கிறார்.
GQ India ஊடகத்துடனான நேர்காணலில் இதைப் பகிர்ந்துகொண்ட ஸ்ரேயஸ் ஐயர், “நான் கடந்து வந்த வலியை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. ஒரு கால் முழுமையாகச் செயலிழந்துவிட்டது.
முதுகெலும்பு அறுவை சிகிச்சை மூலம், முதுகில் ஒரு ராட் (Rod) வைத்து அதைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், எனக்கு நரம்பு பாதித்திருந்தது.
உண்மையில் மிகவும் ஆபத்தானது. நுனி கால் வரை வலி பரவியது. அது மிகவும் பயமாக இருந்தது.

விளையாட்டு வீரர்களை மக்கள், ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாகச் செயல்பட வேண்டிய ரோபோக்களாகப் பார்க்கிறார்கள்.
ஆனால், திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது” என்று கூறினார்.
அந்த முதுகுவலி சிகிச்சை காரணமாக 2023 ஐ.பி.எல் மற்றும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியையும் ஸ்ரேயஸ் ஐயர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…