
அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற சாதனையை ’லோகா’ முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிக வசூல் செய்த மலையாள படங்களுள் ‘எம்புரான்’, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மற்றும் ‘துடரும்’ ஆகிய படங்கள் முதல் மூன்று இடத்தில் இருக்கின்றன. இவை அனைத்துமே ரூ.200 கோடி வசூலைத் தாண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘லோகா’ படமும் ரூ.200 கோடி வசூலை கடந்திருக்கிறது. விரைவில் ‘துடரும்’ மற்றும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.