• September 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​திடீர் உடல் நலக்​குறை​வால் உயிருக்​குப் போராடிய 2 வயது குழந்​தையை உரிய நேரத்​தில் மருத்​து​வ​மனை​யில் சேர்த்து உயிரைக் காப்​பாற்​றிய சிறப்பு எஸ்​ஐ-யை காவல் ஆணை​யர் அருண் நேரில் அழைத்து பாராட்​டி​னார். திரு​வொற்​றியூரில் உள்ள தனி​யார் மேல்​நிலைப் பள்ளி ஒன்​றில் கடந்த 26-ம் தேதி ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ குறைதீர் முகாம் நடை​பெற்​றது.

இதில், கலந்​து​கொண்ட வினோத்​கு​மார் என்​பவரது 2 வயது ஆண் குழந்​தைக்கு திடீரென வலிப்பு ஏற்​பட்​டது. அங்​கிருந்த மருத்​து​வக் குழு​வினர் உடனடி​யாக முதலுதவி சிகிச்சை அளித்​தும் சரி​யா​கவில்லை. இதை அங்கு பணியி​லிருந்த தொற்​று​நோய் மருத்​து​வ​மனை காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ மாரிதுரை கவனித்​தார், உடனடி​யாக அவர் அக்​குழந்​தையை தூக்​கிக் கொண்டு பொது​மக்​கள் உதவி​யுடன் இருசக்கர வாக​னத்​தில் விரைந்து அரு​கில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *