டிஜிட்டல் விருதுகள் 2025
டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்’ விழாவையும் முதல் முறையாக நடத்தவிருக்கிறது விகடன்!
`Best Solo Creator – Male’, `Best Solo Creator – Female’, `Best Couple Creator’ என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருதுகளின் ஒவ்வொரு பிரிவின் நாமினேஷனுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்திருந்தது.
யூட்யூப், இன்ஸ்டாகிராம் என டிஜிட்டல் தளத்தில் அதகளப்படுத்திக் கொண்டிருக்கும் பலரும் அந்த நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். கோலாகலத்திற்குப் பஞ்சமின்றி பிரமாண்டமாக இந்த விருது விழா வருகிற செப்டம்பர் 13-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. நம் ஃபேவரைட் சோசியல் மீடியா பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துக் கொள்கின்றனர்.
இப்போது, விருதுகளை வெல்லப் போகும் வெற்றியாளரையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் நம் விகடன் இணையதளத்தில் ஒவ்வொன்றாகத் தொடர்ந்துப் பார்க்கலாம்.
Best Solo Creator – Female
இப்பிரிவில் உத்ரா வைஷ்ணவி, மண்வாசம் லாவண்யா, சரண்யா மருந்தையா, சிம்ப்ளி ஷ்ருதி, ஜெனி எம்.ஜே, சுபாலக்ஷ்மி பரிதா, ஆர். ஜே. ஆனந்தி, Sri’s Loud Speaker, Soniya Solo Sign, Bhavani Vlogs ஆகியோர் இந்த விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள்.
ஜூரிகளின் தேர்வுபடி இந்தப் பிரிவின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் Soniya Solo Sign.

Best Solo Creator – Female – Soniya Solo Sign:
சமூக வலைத்தளங்களில் பெண்கள் கிரியேட்டர்களாக கோலோச்சினாலும், அவர்களின் அசலான உலகத்தைக் கண்முன் நிறுத்தும் சேனல்களோ, பக்கங்களோ அபூர்வம். அப்படியான சூழலில் அதிரடியாகப் புறப்பட்டு வந்து, பெண் உலகினை நகைச்சுவை முலாம் பூசி, உண்மையாக எடுத்து வைப்பதில் கவனம் பெறுகிறார் Soniya Solo Sign.

கையிலெடுத்த ஒவ்வொரு கேரக்டரையும் வித்தியாசப்படுத்திக் காட்டும் சோனியாவுக்கு, Best Solo Creator – Female விருது வழங்கி கௌரவிக்கிறது விகடன்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…