• September 10, 2025
  • NewsEditor
  • 0

சமூக வலைத்தளங்கள் முடக்கம்

நேபாளம் நாட்டில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி சமூக வலைத்தளங்கள் முடக்கம், இளைஞர்களை மிகப் பெரிய போராட்டத்துக்கு தூண்டியது.

இதுவரை அரசின் நடவடிக்கையால் போராட்டக்காரர்கள் 300 பேர் காயமடைந்துள்ளனர். 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்டு, பிரதமர், உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்த பிறகும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

ராணுவம் போராட்டத்தைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

Nepal Protest

பிரதமர் கே.பி சர்மா ஒலி

மாணவர்கள் தலைமையிலான போராட்டம் தொடங்கப்பட்டபோது, “ஜென் Z-களின் கூச்சலுக்கு அடிபணிய மாட்டோம்” எனக் கூறிய பிரதமர் கே.பி சர்மா ஒலி, “சமூக ஊடகங்களை நாங்கள் தணிக்கை செய்யவில்லை, ஒழுங்குபடுத்துகிறோம்” என சமாதானம் செய்தார்.

பின்னர் சமூக ஊடகங்கள் மீதான தடையை நீக்கி அறிவித்தது அரசு. போராட்டக்காரர்கள் வலியுறுத்தலைத் தொடர்ந்து ராஜினாமா செய்தார் பிரதமர் ஒலி.

அவர் நாடுகடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர் போராட்டக்காரர்கள். ராணுவம் சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

போராட்டத்துக்குப் பின்னால்

இந்த மாபெரும் போராட்டத்தில் ஜென் Z இளைஞர்களின் முகமாகத் திகழ்ந்தவர் சுதன் குருங். 36 வயதான இவர் `ஹமி நேபாள்’ என்ற அமைப்பின் தலைவர்.

என்.ஜி.ஓ அமைப்பாகத் தொடங்கப்பட்ட இது, குடிமை – அரசியல் இயக்கமாக மாறியிருக்கிறது. `ஹமி நேபாள்’ அமைப்பு சமூக ஊடகங்கள் வழியாக மக்களை ஒருங்கிணைக்கும் வேலையைச் செய்து வந்தது.

சமூக ஊடகங்களை முடக்கிய நேபாள அரசின் மசோதா கருத்து சுதந்திரத்தைத் தடுப்பதாகவும், அரசுக்கு எதிரான குரல்களை நெரிப்பதாகவும் காத்மண்டுவில் பள்ளிச் சீருடையில் மாணவர்களைத் திரட்டிப் பேரணியை நடத்தியது சுதன் குருங்கின் குழு.

Hami Nepal

போராட்டம்

இந்தப் போராட்டம் அரசின் ஊழல் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிரானதாக இருக்கும் எனக் கூறியது ஹமி நேபாள்.

இதற்காக நேபாளம் அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஆடம்பர வாழ்க்கை வாழும் வீடியோக்களை ஆன்லைனில் பரப்பினர்.

nepo-kid பிரசாரம் இந்தப் போராட்டத்தை எழுப்பியதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.

மின் தடைக்கு முன்பு போராட்ட வழிமுறைகளையும், பாதுகாப்பு நெறிமுறைகளையும் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பியது.

போராட்டம் வன்முறையாக மாறியதனால் பலர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகள் காயமடைந்த போராட்டக்காரர்களால் நிரம்பி வழிகிறது. ரெஸ்ட் இஸ் ஹிஸ்டரி!

யார் இந்த Sudan Gurung?

2015ஆம் ஆண்டு நேபாளம் நிலநடுக்கத்துக்குப் பிறகு, உருவான இளைஞர் அமைப்பு ஹமி நேபாள். ஒரு நிகழ்வு ஒருங்கிணைப்பாளரான இவர், நிலநடுக்கத்தில் தனது மகனை இழந்த சுதன் பாதிப்படைந்தவர்களுக்கு உதவுவதற்காக ஹமி நேபாளை உருவாக்கினார்.

இன்றைய தலைமுறையினர் ஆன்லைனில் வெளிப்படுத்தும் விரக்திகளின் மூலக் காரணத்தைக் கண்டறிந்து அமைதியான முறையில் அதனைக் களைபவராகப் பார்க்கப்படுகிறார்.

நேபாளம் போராட்டம்

Dharan’s “Ghopa camp” உள்ளிட்ட சில முக்கிய போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார். துருக்கியில் 2019ஆம் ஆண்டு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஹமி நேபாள் அமைப்பு நிவாரண உதவிகளை வழங்கியது. தொடர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டது.

இப்போது டிக்-டாக் முதல் டிஸ்கார்ட் வரை அனைத்து சமூக வலைத்தளங்களும் போராட்டக் கருவிகளாகப் பார்க்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது.

அனைத்திலும் ஊழலுக்கு எதிரான இளைஞர்கள் குழுவைக் கட்டமைத்துள்ளது ஹமி நேபாள் அமைப்பு.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *