
சிம்லா: பள்ளிப் படிப்பை தவறவிட்ட வயது வந்தோருக்கு கல்வி அளிக்கும் உல்லாஸ் (ULLAS) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு இமாச்சலில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பேசுகையில், நாட்டின் 4-வது முழு எழுத்தறிவு பெற்ற மாநில மாக இமாச்சலம் மாறியுள்ளது என அறிவித்தார். மிசோரம், கோவா, திரிபுரா மாநிலங்கள் ஏற்கெனவே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலங்களாக மாறின.