
கருமை அழகைப் போற்றும் விதமாக ‘ஈவா’ என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் பிரணாய் உருவாக்கிய இதன் பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். காதல், ஈர்ப்பு, அழகியல் ஆகியவை கருமையில் எவ்வாறு இருக்கின்றன என்பதையும் அந்த அழகை நேசிக்கும் ஆண்களின் பார்வையையும் இந்தப் பாடல் காட்சிப்படுத்துகிறது. பாடலின் ஒலி வடிவமைப்பு, கலவையை பஷாப் பட்டாசார்யா செய்துள்ளார். ‘ஈவா’ த்ரைவர் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா மியூசிக் இப்பாடலை வெளியிட்டுள்ளது. கபில் கபிலன் பாடியுள்ள இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.