
குல்காம்: ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் 2வது நாளாக நடத்திய துப்பாக்கிச் சண்டையில், இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குல்காமின் குடார் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.