
சென்னை: செப்டம்பர் 6ம் தேதி காவலர் நாள் தொடர் நிகழ்ச்சிகளாக சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு சார்பாக வணிக வளாகம் மற்றும் மெரினா கடற்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு சைபர் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் காவல் குடும்பத்தினரின் ரத்த தானம் வழங்கினர்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "தமிழக முதல்வர் ஏப்ரல் 29ம் தேதி அன்று ”முதன் முதலாக 1859-ம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6ம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும்” என அறிவித்திருந்தார்.