• September 9, 2025
  • NewsEditor
  • 0

நடிகை ஐஸ்வர்யா ராய், தனது பெயர், புகைப்படம், குரல் போன்றவற்றை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதைத் தடுக்க டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் மனுவில் சில இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் தனது பெயரையும் புகைப்படங்களையும் AI மூலம் உருவாக்கப்பட்ட ஆபாச வீடியோக்களிலும் விளம்பரங்களிலும் தவறாக பயன்படுத்துகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதனைத் தடுக்கும் விதமாக உடனடி இடைக்கால உத்தரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராய்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீஜஸ் காரியா, குற்றம் சாட்டப்பட்ட 151 இணைய இணைப்புகளை (URLs) அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யாவின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சாண்டீப் சேத்தி மற்றும் குழுவினர் ஆஜராகினர். இந்த வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணை ஜனவரி 15, 2026 அன்று நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும், அமிதாப் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷ்ராப் போன்ற பிரபலங்களும் தங்களது “புகழ் உரிமைகள்” பாதுகாப்புக்காக இதே போன்ற வழக்குகளை தொடர்ந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *