• September 9, 2025
  • NewsEditor
  • 0

போபால்: மத்​திய பிரதேசத்​தில் தண்​டனை காலத்​துக்கு அதி​க​மாக சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்​தவருக்கு ரூ.25 லட்​சம் இழப்​பீடு வழங்க வேண்​டும் என மாநில அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மத்​திய பிரதேச மாநிலத்​தைச் சேர்ந்த சோஹன் சிங் மீது பாலியல் வன்​கொடுமை புகார் எழுந்​தது. இந்த வழக்கை விசா​ரித்த கீழமை நீதி​மன்​றம் கடந்த 2005-ம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்​டனை​யும் ரூ.2 ஆயிரம் அபராத​மும் விதித்​தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மத்​திய பிரதேச உயர் நீதி​மன்​றத்​தில் அவர் மேல் முறை​யீடு செய்​தார். இதை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், சில குற்​றச்​சாட்​டு​களுக்கு போது​மான ஆதா​ரம் இல்லை எனக் கூறி ஆயுள் தண்​டனையை 7 ஆண்​டு​களாக குறைத்து கடந்த 2017-ல் உத்​தர​விட்​டது. ஆனால் 8 ஆண்​டு​கள் கழித்து கடந்த ஜூன் மாதம்​தான் சோஹன் சிங் விடு​தலை செய்​யப்​பட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *