• September 9, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: கடல் முதல் மலைகள் வரை இந்​தி​யா​வின் எல்​லைப் பகு​தி​களை ட்ரோன்​கள் மூலம் கண்​காணிக்க ராணுவம் திட்​ட​மிட்டுள்​ளது. பாகிஸ்​தான், சீனா, வங்​கதேசம், மியான்​மர், பூடான் நாடு​களு​டன் இந்​தியா எல்​லையை பகிர்ந்து கொண்டு உள்​ளது. மேலும் இலங்​கை, மாலத்​தீவு ஆகிய தீவு நாடு​கள் இந்​தி​யா​வுக்கு அருகே அமைந்​துள்​ளன. மிக நீண்ட கால​மாக சீன, பாகிஸ்​தான் எல்​லைப் பகு​தி​களில் பிரச்​சினை நீடித்து வரு​கிறது.

எல்​லைப் பிரச்​சினை தொடர்​பாக கடந்த 1962-ம் ஆண்​டில் இந்​தி​யா, சீனா இடையே மிகப்​பெரிய போர் நடை​பெற்​றது. கடந்த 2017-ம் ஆண்​டில் சிக்​கிமின் டோக்​லாம் பகு​தி​யில் இரு நாடு​கள் இடையே 73 நாட்​கள் போர் பதற்​றம் நீடித்​தது. கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் லடாக்​கின் கல்​வான் பள்​ளத்​தாக்கு பகு​தி​யில் இந்​திய, சீன வீரர்​களிடையே மிகப்​பெரிய மோதல் ஏற்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *