
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அர்கா மீடியா வொர்க்ஸ் (Arka Media Works) தயாரிப்பில், பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், ராணாடகுபதி, சத்யராஜ், நாசர் ஆகியோர் நடித்த பாகுபலியின் இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றிபெற்றன.
இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரமான சிவகாமி தேவி வேடத்திற்காக முதலில் தேர்வு செய்யப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியும் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டினார்.
ஆனால், சம்பளம் மற்றும் பிற தேவைகள் குறித்து தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் சில முரண்பாடுகள் ஏற்பட்டன. இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, ராஜமௌலி மற்றும் ஸ்ரீதேவிக்கு இடையே ஒரு பிணக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாகவே ஸ்ரீதேவி ‘பாகுபலி’ படத்தில் நடிக்கவில்லை. இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து ஶ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் மனம் திறந்துப் பேசியுள்ளார்.
சமீபத்தில் கேம் ஜேஞ்சர் எனும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில், “பாகுபலி படத்தில் ஸ்ரீதேவி நடிக்காததற்கு தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட குழப்பம்தான் காரணம்.
ராஜமௌலி எங்கள் வீட்டிற்கு வந்து கதை பற்றிப் பேசினார். ஶ்ரீதேவிக்கும் கதையும், கதாபாத்திரமும் பிடித்திருந்தது. அவரும் நடிப்பதாக ஒப்புக்கொண்டார்.
இந்தியாவின் தலை சிறந்த நடிகைகளில் ஒருவர், நடிப்பால் படத்திற்குக் கூடுதல் பலம் சேர்ப்பார். மேலும், இந்தி, தமிழ் என இரு மொழிகளிலும் அவருக்கான அங்கிகாரம் படத்திற்குப் பெரும் பலம்.
இத்தனைச் சாதகமான சூழல் இருந்தும், தயாரிப்பாளர்கள் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்திற்காக ஸ்ரீதேவி வாங்கிய சம்பளத்தை விடக் குறைவான சம்பளத்தைப் பேசினர்.

அதனாலேயே அவர் அந்தப் படத்தில் நடிக்கவில்லை? ஆனால், ஶ்ரீதேவி அதிகமான சம்பளம் கேட்பதாக ராஜமௌலியிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
நடந்தது என்னவென்பதை அவர்கள் கூறவே இல்லை. இந்தத் தவறான விஷயங்களை ராஜமௌலியிடம் கூறிய குற்றவாளிகள் அவர்கள்தான்” என வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…