
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இன்று (செப். 9) நடைபெற உள்ளது. இதில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வந்த அவர், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவையும் சந்தித்தார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாட்டின் ஆன்மாவை காப்பாற்ற எனக்கு வாக்களியுங்கள் என்று சுதர்சன் ரெட்டி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் கால்நடை தீவன ஊழலில் தண்டனை பெற்ற லாலுவை அவர் சந்தித்துள்ளார்.