• September 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ம​தி​முக​வில் துணை பொதுச் செய​லா​ள​ராக இருந்த மல்லை சத்​யா, கட்​சி​யில் இருந்து நிரந்​தர​மாக நீக்​கப்​படு​வ​தாக வைகோ அறி​வித்​துள்​ளார். மதி​முக துணை பொதுச்​செய​லா​ள​ராக பதவி வகித்​தவர் மல்லை சத்​யா. மதி​முக முதன்​மைச்செய​லா​ள​ராக துரை வைகோ பதவி​யேற்​றது முதல் மல்லை சத்​யா​வுக்​கும் மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோவுக்​கும் இடையே மோதல் தொடங்​கியது.

இதையடுத்​து, கட்சி கட்​டுப்​பாட்டை மீறிய​தாக மல்லை சத்யா மதி​முக​வில் இருந்து தற்​காலிக​மாக நீக்​கப்​பட்​டார். மேலும் மல்லை சத்​யா​விடம் கடந்த 17-ம் தேதி விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்​பட்​டது. அதற்கு அவர் பதிலளித்​திருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *