• September 9, 2025
  • NewsEditor
  • 0

ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு குறிப்பாக ஐபோன் பிரியர்களுக்கு செப்டம்பர் மாதம் என்றாலே அது ஆப்பிள் மாதம்.

காரணம், ஆப்பிள் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களின் அடுத்த சீரிஸ் ஐபோன்களை செப்டம்பரில்தான் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், ஐபோன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஐபோன் 17 சீரிஸ் போன்கள் நாளை (செப்டம்பர் 9) வெளியாகிறது.

இந்த வெளியீட்டு நிகழ்வு அமெரிக்காவில் கலிஃபோர்னியாவின் குபெர்டினோ நகரில் உள்ள ஆப்பிள் பார்க்கில் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நாளை நடைபெறும்.

இந்திய நேரப்படி நாளை இரவு 10.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பாகும்.

Plus Out, Air In!

ஐபோன் 16 சீரிஸிஸ் பொறுத்தவரை ஐபோன் 16, 16 ப்ளஸ், 16 ப்ரோ, 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை வெளியாகியிருந்தன. இம்முறை, ஒரேயொரு மாற்றமாக ப்ளஸ் மாடலுக்குப் பதில் ஏர் மாடல் அறிமுகமாகவிருக்கிறது.

Iphone 17 Air

ஐபோன் 17 ஏர், ஆப்பிள் ஸ்மார்ட்போன் வரிசையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு மெல்லியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோராயமாக 5.5 மில்லிமீட்டர் தடிமனில் இது வரக்கூடும். இவ்வளவு ஸ்லிம்மான போன் எனில் நிச்சயம் இ-சிம் வசதி மட்டும்தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

6.6 இன்ச் டிஸ்பிளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மாடலில், பின்புறம் 48 மெகாபிக்ஸல் (MP) கொண்ட ஒரேயொரு கேமரா மட்டும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதுவும் கேமரா டிசைன் வழக்கமானதாக அல்லாமல் கூகுள் பிக்ஸல் கேமரா டிசைனில் இருக்கும் என்று லீக்ஸ் தெரிவிக்கின்றன.

இந்த மாடல் A19 ப்ராசெஸ்ஸரில் இயங்கும் என்றும், நிறுவனத்தின் முதல் இன்-ஹவுஸ் வைஃபை சிப் மற்றும் C1 மோடம் ஆகியவற்றை இது உள்ளடக்கியிருக்கும் என்றும் தகவல்கள் பரவுகின்றன.

இந்த மாடல், ஐபோன் 17-க்கும் 17 ப்ரோவுக்கும் இடைப்பட்டதாக இருக்கும்.

Iphone 17

ஐபோன் 17 மாடலானது இதற்கு முந்தைய மாடல்களின் டிஸ்பிளேவை (6.1 இன்ச்) விட சற்று பெரிதாக 6.3 இன்ச்சுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக எந்தவொரு நம்பர் சீரிஸிலும் இல்லாத வகையில் 120Hz டிஸ்ப்ளே தொழில்நுட்பத்துடன் இந்த மாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மற்றபடி, A19 ப்ராசெஸ்ஸர், 12 ஜிபி ரேம், பின்புறம் 48 MP + 12 MP டூயல் கேமரா செட்அப், முன்பக்கம் 24 MP கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் இதில் இடம்பெறக்கூடும்.

ஐபோன் 17 சீரிஸ் (சித்தரிப்புப் படம்)

Iphone 17 Pro & 17 Pro Max

ஐபோன் 12 ப்ரோ முதல் இதுவரை வெளிவந்த ப்ரோ & ப்ரோ மேக்ஸ் மாடல்களைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட புதிய கேமரா டிசைன் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிபோட்டோ லென்ஸ் 12 MP-யிலிருந்து 48 MP-ஆக அதிகப்படுத்தக்கூடும். டிஸ்பிளேவைப் பொறுத்தவரை 17 ப்ரோ 6.3 இன்ச், 17 ப்ரோ மேக்ஸ் 6.9 இன்ச் இருக்கக்கூடும்.

இந்த இரு மாடல்களும் A19 ப்ரோ ப்ராசெஸ்ஸரில் இயங்கக்கூடும்.

ஐபோன் 17 சீரிஸ் (சித்தரிப்புப் படம்)
ஐபோன் 17 சீரிஸ் (சித்தரிப்புப் படம்)

Colours:

ஐபோன் 17 சீரிஸ் நிறங்கள் பொறுத்தவரை வழக்கமான சில்வர், ப்ளாக், நேவி ப்ளூ ஆகிய நிறங்களுடன் புதிதாக ஆரஞ்சு நிறமும் வரும் என்று தகவல்கள் கசிகின்றன.

Price (தோராயமாக):

ஐபோன் 17 – 800 டாலர் (ஆரம்ப விலை)

ஐபோன் 17 ஏர் – 900 டாலர் (ஆரம்ப விலை)

ஐபோன் 17 ப்ரோ – 1099 (ஆரம்ப விலை)

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் – 1199 (ஆரம்ப விலை)

இதில் ப்ரீ புக்கிங் செப்டம்பர் 13-ம் தேதியும், விற்பனை செப்டம்பர் 19-ம் தேதியும் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *