
சென்னை: ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணங்கள் மூலம் மொத்தம், 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மூலமாக, 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய வகையில், 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு முன்வந்து இருக்கிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு திரும்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.