
கோபிசெட்டிபாளையம்: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று தான் எழுப்பிய குரலுக்காக தனது பதவி பறிக்கப்பட்ட நிலையில், தனக்கு ஆதரவாக ராஜினாமா செய்த தொண்டர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தி ன் இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தில் உள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ஒன்றினைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி இருந்தார்.