• September 6, 2025
  • NewsEditor
  • 0

கிரிக்கெட் உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் வீரர் தோனி. அவருடைய பேட்டிங், கீப்பிங் திறமைகளைக் கடந்து கேப்டன்சிக்காகவும் புகழப்பட்டவர்.

Dhoni-யின் கேப்டன்சி

அவர் எடுக்கும் முடிவுகள் உள்ளுணர்வு சார்ந்ததாகவும் அதேவேளையில் நன்கு திட்டமிடப்பட்டதாகவும் இருக்கும். அந்த கேப்டன்சி 2010, 2011, 2018, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிபெறச் செய்தது.

Dhoni

3 வகையான உலகக்கோப்பைகளை வென்று, உலகின் சிறந்த கேப்டன் எனப் புகழப்பட்டவர். கடந்த ஆண்டு ருதுராஜ் காயம் காரணமாக வெளியேறியதால் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார் தோனி. ஆனால் சீசனின் முடிவில் சென்னை அணி, கடைசி இடத்தில் இருந்ததனால் அவரது கேப்டன்சி குறித்தும் கேள்விகள் எழுந்தன.

ரிக்கி பாண்டிங் சுட்டிக்காட்டியது என்ன?

ஆஸ்திரேலியாவின் உலகக்கோப்பை வென்ற முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் தோனியின் கேப்டன்சியை புகழ்ந்துப் பேசியுள்ளார். “களத்தில் இருக்கும் கேப்டன் டக்அவுட்டிடம் ஆலோசனை கேட்காமல் விளையாடுவது மிகவும் அரிதானது. ஐபிஎல்லில் அதைச் செய்யாத ஒரே கேப்டன் எம்.எஸ்.தோனி மட்டுமே. ” எனக்கூறியுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங், நவீன கிர்க்கெட்டில் டி20 போட்டிகளின் போது அதிக அழுத்தம் ஏற்படும் சூழலில் கேப்டன்கள் புள்ளி விவரங்கள், பகுப்பாய்வு மற்றும் பயிற்சியாளர்களை நம்பியிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *