
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்து நடிகர் தம்பி ராமையா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைகோ குறித்துப் பேசிய அவர், “வைகோ சினிமாவில் மட்டும் கால் பதித்திருந்தால் இந்த நாட்டின் ஒரே சூப்பர் ஸ்டாராக இருந்திருப்பார்.
அவர் கண் புருவத்திற்கு, குரலுக்கு, கம்பீரத்திற்கு, அவர் மூக்கின் அழகிற்கு வைகோ தவிர வேறு யாரும் சூப்பர் ஸ்டாராக இருந்திருக்க முடியாது. அவர் சினிமாவிற்கு வந்திருந்தால் அமிதாப் பச்சன் வைகோவிடம் பிச்சை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் அவர் தேர்ந்தெடுத்த துறை அரசியல். ஒரு முறை இசை மேடைக்கு வந்து பேசும்பொழுது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கையில் சிறு குறிப்புகூட இல்லாமல் வைகோ பேசிய பேச்சு அந்த அவ்விழாவில் கலந்துகொண்டிருந்த ரஜினிகாந்த்தையே வியக்க வைத்துவிட்டது.
இன்று அவரின் பரிணாம வளர்ச்சியாகத்தான் தம்பி துரை வைகோவைப் பார்க்கிறேன். அவர் நான் பெரியாரையும் வணங்குவேன். பெருமாளையும் வாங்குவேன் என்கிறார்.
இதுதான் பரிணாம வளர்ச்சி. வாழ்க்கையை நெறிப்படுத்துவது, முறைப்படுத்துவது எல்லாம் ஆன்மீகம்தான்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…