• September 5, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

நாய்கள் மனிதர்களின்தோழன்.நாய்நன்றியுள்ள விலங்கு. உயிர்களிடத்து அன்பு வேண்டும். நமக்கு சிறு வயதிலிருந்தே‌ போதிக்கப்பட்ட இவை எல்லாமே உண்மையான நியாயமான போதனைகள் தான்.

ஆனால் இப்போதோ நாய் மனிதனின் நண்பனா பாதுகாவலனாக இல்லை உயிர் பறிக்க வந்த எமனா குலை நடுங்க வைக்கும் கூற்றுவனா என்ற விவாதம் பேசு பொருளாகி உள்ளது. நாய்களினால்‌ பாதிக்கப்பட்டவர்களும் விளைவுகளை கண்டு பயந்தவர்களும் தெரு நாய்களின் விவகாரத்தில் தொல்லைகள் ஏற்படாத வகையில் தீர்வு காண்பது அவசியம் என வாதிடுகின்றனர். நாய்களின் நலம் விரும்பிகள் எந்த ஒரு சூழலிலும் நாய்களின் சுதந்திரமோ நலனோ பாதிக்கப்படக்கூடாது என்று போராடுகின்றனர்.

திரைப்படங்களில் நாய்களின் ‌சாகசங்களை ரசித்துப் பார்த்திருக்கிறோம். நிகழ் காலத்திலும் சில இடங்களில் நாய்களின் புத்திசாலித்தனமான செயல்களை பார்த்திருப்போம். ரசித்திருப்போம் கேள்விப்பட்டிருப்போம்.

சில இடங்களில் சிலை கூட வைத்தார்கள் வைக்கிறார்கள். ஆனால் இவர்களெல்லாம் யார்? நாய்களால் ஏதோ ஒரு நேரத்தில் ஏதோ ஒருவகையில் பலன்அடைந்தவர்கள் பாதுகாக்கப்பட்டவர்கள்.

ஆனால் நாய்க்கடியினால் குழந்தைகள் மற்றும் உற்றார் உறவினர்களை இழந்தவர்களை எந்த வகையில் ஆறுதல் படுத்த முடியும்? அதை விடக் கொடுமை நாய்க்கடியினால் பாதிக்கப்பட்ட மக்கள் உயிர் போகும் வரை படும் அவஸ்தை தான் கண்கொண்டு பார்க்க முடியாது.ரேபிஸ் பாதிப்பை அனுபவித்தவர்களுக்குத் தான் அந்த வலியும் வேதனையும் புரியும்.

தாங்க முடியாத துன்பம் உண்டாகும் போது அதை ஏற்படுத்தும் வளர்ப்பு பிராணிகளை விட முக்கியம் மனித உயிர்களில்லையா?

முதலில் தோட்டத்தில் காடுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி நாய்கள் வளர்த்தனர்.எங்கும்அத்துமீறல்கள் இல்லை.

அந்த நாய்களும் ‌ தோட்ட எல்லை வரை பாதுகாப்பு கொடுப்பவையாகவே வாழ்ந்து பழகின. வீட்டில் வளர்க்கும் நாய்களும் நம் சொற்படிந்து ஒரு நண்பன் போல் வீட்டின் ஒருநபர்போல்தான்இருக்கினறன. ஆனால் இப்போதோ தெருவில் சுற்றித்திரியும் நாய்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும் பொருட்டு நாம் சிரமப்பட வேண்டியுள்ளது. எல்லை தாண்டிய தெரு நாய்களால் தொல்லை மிக அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்.

பணக்கார வீடுகளில் வளரும் உயர்தர வெளிநாட்டு கலப்பின நாய்களுக்கான உணவு, பராமரிப்பு,நாய் பழக்குநர்கள் போன்ற வசதிகள் இருப்பதால் அவர்களுக்கு தெருநாய்கள் பற்றி அவற்றின் ஆரவாரங்கள் ஆக்ரோஷங்கள், வெறித்தனமான துரத்தல் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.தெருவில்தான் அவர்கள் காலடி படுவதில்லையே.

குடிசை வாழ் மக்கள் உள்ள பகுதிகளில் நடுத்தர வர்க்கத்தினர் வாழும் பகுதிகளில் நாய்களின் கூட்டம் அதிகம்.மக்களோடு மக்களாகத்‌ தான் ‌அவையும் இருக்கின்றன.

உணவுப் பற்றாக்குறை காரணமாக, இனப்பெருக்கநோக்கம் காரணமாக அவை தங்கள் எல்லையைத் தாண்டி ‌எல்லாத் தெருக்களிலும் வலம் வரத் தொடங்கி விட்டன.

தங்களது அத்தியாவசிய தேவைகள் நிறைவேறாத பட்சத்தில் அவை நிலை மாறி மனிதர்களைக் கடிக்க ஆரம்பித்து விட்டன.இதற்கு நேரம் காலம் ஆண் பெண் குழந்தைகள் முதியோர் பாகுபாடு கிடையாது.இதன்பாதிப்பு தெருவில் இறங்கி நடக்கும் மக்களுக்கு மட்டுமே.அதனால் தான் அவர்களுக்கு உணர்ச்சி வசப்பட்டு வரும் கொந்தளிப்பு அதிகமாகிறது. மற்றபடி நாய்களை துன்புறுத்த நினைப்பதோ கொல்லச் சொல்வதோ அவர்களது விருப்பமோ நோக்கமோ இல்லை.இன்னும் சொல்லப்போனால் அடித்தட்டு மக்கள் தான் தனக்குள்ள உணவின் ஒரு பகுதியை அவைகளுக்கு வழங்கி அவைகளுடனே சேர்ந்து உறங்கியும் வாழ்கிறார்கள்.எனவே எல்லோருக்குமே எல்லா உயிர்களின் மீதும் பற்றுதல் உண்டு.

இவர்கள் தீர்வு வேண்டுவதெல்லாம் அரசிடம் தான். தெருவில் நடந்து செல்வோருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பு வேண்டும். குழந்தைகள் முதல் அனைவரும் தெருவில் அச்சமின்றி நடமாட வேண்டும். இதற்கு தெரு நாய்கள் பராமரிப்பு மையங்கள் மண்டலங்கள் வார்டுகள்தோறும் பஞ்சாயத்துதோறும் ‌நிறுவப்பட வேண்டும். உணவின்றி உடல்நலக் கோளாறுகள் உடன் வாடும் நாய்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.தேவைகளை சரியான நேரத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். இனப்பெருக்கம் மிகாமலிருக்க நாய்களுக்கு கருத்தடை செய்யப்படவேண்டும்.

தெருநாய்கள் மேல் அக்கறை காட்டும் மேல்தட்டு மக்கள் இம்மையங்களைத் தத்தெடுத்து தேவையான சேவைகளை அரசுடன் இணைந்து செய்து அரசுக்கு ஒத்துழைப்பு தருவதுடன் தெரு நாய்களால் பாதிக்கப்பட்டோரின் அச்சத்தைப் போக்கி தைரியமும் நம்பிக்கையும் கொண்ட நிம்மதியான மக்கள் நடமாட்டத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்.நல்ல வகையிலான நாய்களின் பராமரிப்பு நமக்கும் பாதுகாப்பு தானே.

ஜீவகாருண்யம் மிக்க விலங்குகள் நல ஆர்வலர்கள் இதைச் செய்வார்களேயானால்

நாட்டுக்கும் நமக்கும் ஏன் நாய்களுக்கும்

எல்லாம் நலமே…செய்வார்களென்று நம்புவோம்.

நம்பிக்கை தானே வாழ்க்கை!?

கோவையிலிருந்து உங்கள்

நீலவேணி தேவராஜன்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *