• September 5, 2025
  • NewsEditor
  • 0

திருநெல்வேலி: ​நாங்​குநேரி அருகே வீட்டு மின் கட்​ட​ண​மாக ரூ.1.61 கோடி செலுத்த வேண்​டும் என்று மின் வாரி​யத்​திலிருந்து வந்த தகவலால் தொழிலாளி குடும்​பத்​தினர் அதிர்ச்சி அடைந்​தனர். நெல்லை மாவட்​டம் நாங்​குநேரி அருகே மூலைக்​கரைப்​பட்டி மின் வாரிய கோட்​டத்​துக்கு உட்​பட்ட மருதகுளம் கிராமத்தை சேர்ந்​தவர் தொழிலாளி மாரியப்​பன். நான்கு பேர் கொண்ட இவரது வீட்டுக்கான மின் கட்​ட​ணத்தை கடந்த சில நாட்​களுக்​கு​முன் ஊழியர் ஒரு​வர் கணக்​கீடு செய்​து​விட்டு சென்​றிருந்​தார்.

இதை தொடர்ந்​து, மின்​கட்டண விவரம் மாரியப்​பனின் செல்​போனுக்கு வந்​துள்​ளது. மின் கட்​ட​ணம் ரூ. 1 கோடியே 61 லட்​சத்து 31 ஆயிரத்து 281 என்று குறிப்​பிடப்​பட்​டு இருந்ததால், மாரியப்​பனின் குடும்​பத்​தினர் அதிர்ச்சி அடைந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *