
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறும் விவகாரம் மீண்டும் அரசியல் விவாதமாக்கப்பட்டிக்கிறது. அத்துடன், ஆளும் என்.ஆர்.காங்கிரஸுக்கும் கூட்டணியில் உடன் இருக்கும் பாஜக-வுக்குமே சுமுகமான உறவு இல்லை என்று சொல்லப்படும் நிலையில், பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
பாஜக-வுக்கு புதுச்சேரியில் முன்பைவிட இப்போது ஆதரவு பெருகி இருப்பதாக உணர்கிறீர்களா?