• September 5, 2025
  • NewsEditor
  • 0

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ரியாலிட்டி ஷோ, நடிப்பு என இருந்தாலும் சொந்தமாக மும்பையில் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். மும்பையில் பாந்த்ரா, பரேல் பகுதியில் பாஸ்டியன் என்ற பெயரில் ரஞ்சித் பிந்த்ரா என்பவருடன் இணைந்து ஆடம்பர ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார்.

அதில் பாலிவுட் பிரபலங்கள் வசிக்கும் பாந்த்ராவில் உள்ள ரெஸ்டாரண்டிற்கு அடிக்கடி பாலிவுட் பிரபலங்கள் அதிக அளவில் வருவதுண்டு. இதனால் அந்த ரெஸ்டாரண்ட் மிகவும் பிரபலம் ஆகும். ஆனால் திடீரென அந்த ரெஸ்டாரண்டை மூடப்போவதாக ஷில்பா ஷெட்டி அறிவித்து இருக்கிறார். இன்று முதல் பாஸ்டியன் ரெஸ்டாரண்ட் மூடப்பட இருக்கிறது.

இது தொடர்பாக ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “பாந்த்ராவில் உள்ள பாஸ்டியனுக்கு வியாழக்கிழமை கடைசி நாளாகும். அதற்குப் பிரியாவிடை கொடுக்கிறோம். எண்ணற்ற நினைவுகள், மறக்க முடியாத இரவு வாழ்க்கையைக் கொடுத்த பாஸ்டியன் இறுதிக்கட்டத்தை எட்டுகிறது” என்று உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால், பாந்த்ராவில் பாஸ்டியன் ரெஸ்டாரண்டை மூடினாலும் அந்த இடத்தில் அம்மாகை என்ற பெயரில் புதிய உணவகத்தைத் திறக்க முடிவு செய்திருப்பதாக ரஞ்சித் பிந்த்ரா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ”பாஸ்டியனின் பாந்த்ரா அத்தியாயத்தை மூடிவிட்டு அதனை அம்மாகை மற்றும் ஜூகுவில் புதிய பாஸ்டியன் கிளப் என இரண்டாகத் திறக்கப்பட இருக்கிறது. அம்மாகை உணவகம் தென்னிந்திய உணவுகளுக்காகத் திறக்கப்படுகிறது.

பாந்த்ரா எங்களது தொடக்கமாக இருந்தாலும் அதனை மூடிவிட்டு அந்த இடத்தில் தென்னிந்திய உணவுகளைக் கௌரவிக்கும் விதமாக அம்மாகை அதில் தொடங்கப்படுகிறது. ஜூவில் புதிதாக பாஸ்டியன் தொடங்கப்படுகிறது. ஒரு அத்தியாயத்தை மூடிவிட்டு இரண்டு கடைகளைத் திறக்கிறோம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஷில்பா ஷெட்டி - அவர் கணவர்
ஷில்பா ஷெட்டி – அவர் கணவர்

முன்னதாக ஷில்பா ஷெட்டி மீது தொழிலதிபர் தீபக் கோதாரி என்பவர் ரூ.60 கோடி மோசடி செய்துவிட்டதாகப் புகார் கூறி இருந்தார். ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் தொழில் வளர்ச்சிக்காக 2015-23, ஆண்டுகளில் ரூ.60 கோடி கடனாகவும், முதலீடாகவும் வாங்கியதாகவும், அந்தப் பணத்தைத் தொழில் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தாமல் சொந்த தேவைக்குப் பயன்படுத்திக்கொண்டதாக தீபக் கோதாரி குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக போலீஸார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள ஷில்பா ஷெட்டியின் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல், பிரச்னை இப்போது தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ராஜ் குந்த்ரா மீது கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பாக அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *