
மதுரை: மதுரை மாவட்டத்தின் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் அதிக அளவில் பங்கேற்றது அதிமுகவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழகத்தில் 2026-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற உள்ளது. இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமி ழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ளார். மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரப் பயணத்தை கடந்த ஜூலை 7-ல் தொடங்கிய பழனிசாமி, இதுவரை 120-க்கும் மேற்பட்ட பேரவைத் தொகுதிகளில் பிரச்சாரம் செய்துள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இந்த மாதம் 23-ம் தேதி எழுச்சி பயணத்தை பழனிசாமி நிறைவு செய்கிறார்.