
திரையரங்க வசூல் கணக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள திரையரங்கில் படத்தின் வசூல் கணக்குகள் தவறாக காட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இது பெரும் சர்ச்சையாக உருவானது. இதனைத் தொடர்ந்து பல்வேறு படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களுடைய படத்தின் வசூல் கணக்குகளையும் சரிபார்க்க தொடங்கியிருக்கிறார்கள். இது தொடர்பாக நடப்பு தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரைப்பட கண்காட்சியாளர்கள் சங்கம் உள்ளிட்டவற்றுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.