
2017 ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட போது, 5%, 12%, 18%, 28% என நான்கு வரி ஸ்லாப்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இப்போது இந்த ஸ்லாப்கள் 5% மற்றும் 18% என இரண்டு ஸ்லாப்களாக மட்டும் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி மருத்துவம் சார்ந்த பொருட்கள், விவசாயம் சார்ந்த பொருட்கள், உணவுப்பொருள்கள், கல்வி சம்பந்தப்பட்ட பொருள்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகித வரியாகவும், 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகித வரியாகவும், 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகித வரியாகவும் பொருள்கள் குறைப்படும் என கூறப்பட்டிருக்கின்றன.
எந்தெந்தப் பொருள்களுக்கு வரிச் சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த முழுவிவரம்
இந்த வரி மாற்றம் வரும் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் இந்த ஜிஎஸ்டி வரிமாற்றத்தை வரவேற்றிருக்கும் அதிமுக எடப்பாடி பழனிசாமி, “அதிமுக சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.
மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை வழிநடத்துவதில் தொலைநோக்குத் தலைமைத்துவம் வகித்ததற்காக பிரதமர் மோடி அவர்களுக்கும், எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் வளர்ச்சி சார்ந்த ஜிஎஸ்டி கட்டமைப்பை உறுதி செய்வதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் எனது நன்றி.
On behalf of @AIADMKOfficial, I wholeheartedly welcome the historic decisions of the #GSTCouncil.
My appreciation to Hon'ble Prime Minister Thiru. @narendramodi avl for his visionary leadership in steering transformative reforms, and to Hon'ble Finance Minister Tmt. @nsitharaman…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) September 4, 2025
அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரம், வேளாண் உள்ளீடுகள் மற்றும் காப்பீடு ஆகியவற்றில் இரண்டு அடுக்குகளுக்கு (5% & 18%) நிவாரணம் வழங்குவது எளிமை, நியாயத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்கிறது. நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும்.” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs