• September 4, 2025
  • NewsEditor
  • 0

ஸ்ரீநகர்: ​காஷ்மீரில் மீண்​டும் நிலச்​சரிவு ஏற்​பட்​ட​தால் மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்​திரை 9-வது நாளாக நேற்​றும் நிறுத்​தப்​பட்​டது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது.

இதனால் ஆறுகளில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளதுடன் மலைப் பகு​தி​களில் நிலச்​சரிவு ஏற்​பட்​டுள்​ளது. ரியாசி மாவட்​டத்​தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்​லும் பாதை​யில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நிலச்​சரிவு ஏற்​பட்​டது. இதில் 34 பக்தர்கள் உயி​ரிழந்​தனர். 20 பேர் காயமடைந்​தனர். இதையடுத்து வைஷ்ணவி தேவி கோயிலுக்​கான யாத்​திரை தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *