• September 3, 2025
  • NewsEditor
  • 0

வேலைக்கு சேர்ந்த பின்பு ஒரு பெண், தனது முதல் மாத சம்பளத்தை எடுத்து தந்தையின் கனவை நிறைவேற்றியுள்ளார்.

நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட ஒரு பெண் தந்தையின் கனவை நினைவாக்கியுள்ளார்.

ரெட்டிட் பதிவில் இதுகுறிது ஒரு பெண் தந்தையின் கனவை எப்படி நிறைவேற்றினார் என்று பகிர்ந்துள்ளார். அதன்படி ஒரு முறை தாஜ் ஹோட்டலை கடந்து சென்ற போது தனது தந்தை அங்கு ஒருபோதும் சென்றதில்லை என்று சாதாரணமாக கூறியதை நினைவு கூர்ந்து இருக்கிறார்.

1980 களின் காலத்தில் அவரது பெற்றோர் மும்பையின் தாஜ் ஹோட்டலுக்கு வெளியே நின்று ஒரு புகைப்படம் எடுத்திருந்தனர். ஆனால் அங்கு தங்குவது எப்போதும் அவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்ததாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.

தான் வேலைக்கு சேர்ந்த பின்பு முதல் மாத சம்பளத்தை ஒரு அர்த்தமுள்ள விஷயத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று அந்த பெண் விரும்பி இருக்கிறார். தந்தை சாதாரணமாக கூறிய அந்த வார்த்தையை அவர் நினைவுகூர்ந்து, தாஜ் ஹோட்டலில் ஒரு அறையை முன் பதிவு செய்து தந்தையை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

இது மறக்க முடியாத அனுபவமாக இருக்க வேண்டும் என்று ஹோட்டல் ஊழியர்கள் உதவியுடன் தந்தைக்கு கடிதம், பூக்கள், கேக், குடும்பத்துடன் புகைப்படம் என பல விஷயங்கள் திட்டமிடப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களுக்கு முன்பு அவரது தாய் சுற்றுலா பயணி ஆக ஹோட்டலுக்கு வெளியே எடுத்த புகைப்படமும் அதில் இடம்பெற்று இருந்தது.

இது வெறும் ஆடம்பர ஹோட்டல் அனுபவமாக இல்லாமல் ஒரு உணர்ச்சிகரமாக அனுபவமாக இருக்கும் என்று இதனை செய்ததாகவும், பெற்றோரின் கனவை இந்த வயதில் நிறைவேற்றி என் தந்தைக்கு இந்த வயதில் மறக்க முடியாத நினைவை வழங்கியது என் வாழ்நாளில் பெரிய பெருமை என்று அந்தப் பெண் நெகிழ்ந்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *