• September 2, 2025
  • NewsEditor
  • 0

அழகான குழந்தைகளை பார்க்கும்போது அல்லது சிறிய நாய்க்குட்டி பூனைக்குட்டி என கியூட்டாக ஏதேனும் ஒரு விஷயத்தை பார்க்கும்போது அவற்றை கிள்ளவோ, இறுக்கி அணைக்கவோ, விளையாட்டாக கடிக்கவோ தோன்றும். இந்த உணர்வினை கியூட்னஸ் அஃரஸ்யூ (cuteness aggressive) என்று அழைக்கின்றனர்.

எதற்காக இந்த உணர்வு நமது மூளைகளில் தோன்றுகிறது என்பது குறித்தும், இது இயல்பான ஒன்றா என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

அழகான ஒன்றை பார்க்கும் போது விளையாட்டுத்தனமாக அதனை சீண்டிப் பார்ப்போம். அதாவது ஒரு குழந்தையின் கன்னத்தை பிடித்து கிள்ளுதல் அல்லது அவர்களின் கைகளைப் பிடித்து வைத்தல் என விளையாட்டாக செய்வோம். இது உண்மையிலேயே வன்முறையான செயலா என்று கேட்டால் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

மகிழ்ச்சியில் அழுவது போல மிகுந்த அழகு மூளையில் ஒரு வகையான உணர்ச்சி மிகுதியை உருவாக்கும் போது இந்த வகையான உணர்வு இயல்பாகவே வெளிப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மூளையில் இது எப்படி செயல்படுகிறது?

Frontiers in Behavioral Neuroscience இதழில் வெளியான ஆய்வின்படி, அழகிய குழந்தைகள் அல்லது க்யூட்டாக இருக்கும் விலங்குகளின் புகைப்படங்களை பார்த்தவர்களின் மூளையின் மையங்களில் இதுபோன்ற அதிகமான செயல்பாடு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

அதாவது இந்த க்யூட்னஸ் அஹ்ரஸிவ் என்ற உணர்வு அவர்களுக்கு மிகுதியாக ஏற்பட்டுள்ளது. அப்படியானால் அவர்கள் வன்முறையை கையாளுகின்றார்களா என்று கேட்டால் இல்லை, இது மூளையின் உணர்ச்சி மிகுதியை நிர்வகிக்கும் ஒரு வழிமுறை தானே தவிர எந்த ஒரு எதிர்மறையான எண்ணங்களுக்கும் இது வராது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

எல்லாருக்கும் இந்த வகையான உணர்வு ஒரே மாதிரியாக இருக்காது என்றும் உணர்ச்சி உணர்திறன் மற்றும் ஆளுமை பண்புகளைப் பொறுத்து இது மாறுபடும் என்று கூறுகின்றனர்.

மிகுந்த மகிழ்ச்சியை ஒரு சிறிய ஆக்ரோஷத்துடன் சமநிலைப்படுத்துவதன் மூலம் மூளை ஒரு விதமான நிலைத்தன்மையில் செயல்படுவதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *