
ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தனது தாயை அவமதித்துவிட்டதாக பிரதமர் மோடி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பீஹாரில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
தர்பங்காவில் யாத்திரையின் போது, ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில்தான் ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தனது தாயை அவமதித்துவிட்டதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
“அம்மாதான் உலகம். அம்மாதான் எங்கள் சுயமரியாதை. பாரம்பரியம் நிறைந்த இந்த பீஹாரில் சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வை நான் நினைத்துப் பார்த்ததே இல்லை. என் தாயை அவமதித்துவிட்டனர்.
ஆர்.ஜே.டி, காங்கிரஸ் கட்சியினர் என் தாயை மட்டுமல்ல, இந்த நாட்டின் ஒட்டுமொத்த தாய்மார்களையும், சகோதரிகளையும் அவமதித்துவிட்டனர்.”
என் இதயத்தில் எவ்வளவு வலி இருக்கிறதோ, அந்த வலி பீஹார் மக்களிடமும் இருக்கிறது. என் தாயை ஆர்.ஜே.டி, காங்கிரஸ் கட்சியினர் விமர்சிக்கும் நிலை ஏற்படும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது.
அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத எனது தாயாரை ஏன் ஆர்.ஜே.டி, காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தனர்? உங்களைப் போன்ற கோடிக்கணக்கான தாய்மார்களுக்கு சேவை செய்யவே என்னை விட்டு பிரிந்து இருந்தார்.

இப்போது என் அம்மா உயிருடன் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். சில காலத்திற்கு முன்பு, 100 வயதை நிறைவு செய்த பிறகு அவர் நம்மை விட்டுச் சென்றார்.
அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத என் அம்மாவை ஆர்.ஜே.டி, காங்கிரஸ் கட்சியினர் அவமதித்துள்ளனர்.
இது மிகவும் வேதனையானது. என் அம்மா மிகுந்த வறுமையில் என்னை வளர்த்தார். அவர் தனக்கென ஒரு புதிய சேலையைக்கூட வாங்கவில்லை. எங்கள் குடும்பத்திற்காக ஒவ்வொரு பைசாவையும் சேமித்தார்.
பீஹாரில் ஒவ்வொரு தாயிடமும் ஆர்.ஜே.டி, காங்கிரஸ் கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று வேதனையுடன் பேசியுள்ளார்.