• September 2, 2025
  • NewsEditor
  • 0

இந்தியா மீது 50 சதவிகித வரி விதித்து, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நெருக்கடியை உண்டாக்கி இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இதற்கு முன்னர், ட்ரம்ப் இந்தியா மற்றும் ரஷ்யாவை ‘இறந்த பொருளாதாரங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

நேற்று, இந்திய பிரதமர் மோடியின் சீன பயணத்தையொட்டி, ‘இந்தியாவுடன் வர்த்தகம் செய்வது ஒருதலைப்பட்சமான பேரழிவு’ என்றும் தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப்

மோடியின் பதிலடி

நேற்று, இந்திய பிரதமர் மோடியின் சீன பயணத்தையொட்டி, ‘இந்தியாவுடன் வர்த்தகம் செய்வது ஒருதலைப்பட்சமான பேரழிவு’ என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று டெல்லியில் நடக்கும் செமிகான் இந்தியா மாநாட்டில் பேசிய மோடி:

“இந்தியப் பொருளாதாரம் எல்லா எதிர்பார்ப்புகளையும், மதிப்பீடுகளையும் தாண்டி சிறப்பாக செயல்பட்டுள்ளது.

உலகெங்கிலும் பொருளாதார கவலைகளும், பொருளாதார சுயநலத்தால் எழும் சவால்களும் இருக்கும் நேரத்தில், இந்தியா 7.8 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

இந்த வளர்ச்சி அனைத்து துறைகளிலும் காணப்படுகிறது. இந்த உத்வேகத்துடன், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாம் உருவெடுத்து வருகிறோம்.

இந்தியப் பொருள்களை ‘இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது, இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, இது உலகத்தால் நம்பப்படுகிறது’ என்று உலகமே சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று கூறியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *