• September 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் உள்ள சுங்​கச்​சாவடிகளில் நேற்று முதல் அமலுக்கு வந்த சுங்​கக்​கட்டண உயர்வை மத்​திய அரசு திரும்பப் ​பெற வேண்​டும் என்று பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். தமிழகத்​தில் விக்​கிர​வாண்​டி, சமயபுரம், ஓமலூர், கிருஷ்ணகிரி, தரு​மபுரி உள்​ளிட்ட 38 சுங்​கச்​சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரையி​லான சுங்​கக் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்​த நிலை​யில், அதற்கு கண்​டனம் தெரிவித்து பல்​வேறு அரசியல் கட்​சித் தலை​வர்​கள் கூறி​யிருப்​ப​தாவது:

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன்: விலை​வாசி உயர்​வால் மக்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்டு வருகின்றனர். அத்​தி​யா​வசிய பொருட்​கள் உட்பட அனைத்து பொருட்​களின் விலை​யும் உயர்ந்து கொண்டே இருக்​கின்​றன. இதற்கிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்​தி​ய பொருட்​களுக்கு 50 சதவீத வரி விதித்​திருக்​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *