• September 2, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

சென்னையில் என்னோட பயணம் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது. வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு அதிகமான மக்கள் படிக்கிறதுக்கும், வேலைக்காகவும் வருவாங்க. நான் இரண்டாவது ரகம், ஆமாங்க நானும் வேலைக்காக தான் சென்னை வந்தேன். எங்க ஊர் ஒரு சின்ன கிராமம் நான் அதை தாண்டி பெருசா எங்கையும் போனது இல்ல. ஸ்கூல், காலேஜ் எல்லாம் எங்க ஊருலையும், எங்க பக்கத்து ஊருலையும் தான் படிச்சேன். நான் முதன் முறையாக  வெளியில் வந்தது சென்னை தான். 

நான் 2023-இல் கவுன்சிலிங்காக சென்னை வந்தேன். சென்னையில் தான் எங்க அண்ணன், அக்கா எல்லாரும் இருங்காங்க. அப்போ எங்க அண்ணன் சொன்னாங்க நீ பேசாமா சென்னைக்கு வந்துரு பாப்பானு. அப்போ நான் சொன்னேன் இல்லை நான் எங்க ஊருலையே இருந்துக்குறேனு. ஆனா ஒரு மாதம் கழித்து எனக்கு போஸ்டிங் ஆர்டர் வந்ததில் எனக்கு வேலை கிடைச்சது என்னமோ சென்னை தான். அப்போதான் இரண்டாவது முறையாக சென்னை வந்தேன்.

அந்த டைம் தான் 2023 புயல் வந்த நேரம் வந்து இரண்டு நாள் ஆபிஸ் போனேன். மூன்றாவது நாள் ஆபிஸ் லீவ் விட்டாங்க. என்னடா நாம வந்த நேரம் இப்படி ஆகிடுச்சேனு கொஞ்சம் கவலையாக இருந்துச்சு.  மழை காலம் வந்தா எப்போதும் அப்படி  தான இருக்கும் என நானே என்னை சமாதானம் படுத்திக்கிட்டேன். நான் தினமும் ஆபிஸ்க்கு பஸ்ல தான் போவேன், தினமும் காலையில் பஸ்ல ஏறி பஸ் எந்த சிக்னலையும் ரொம் நேரம் நிக்க கூடாதுனு நினைச்சுட்டே போவேன். 

சென்னை வந்து தான் நான் பல விஷயங்கள் கத்துக்கிட்டேன். நிறைய நல்ல விஷயங்களை சென்னை எனக்கு கத்துக்கொடுத்தது.  நான் தைரியமாக எந்த இடத்துலையும் சமாளிச்சுடலாம் அப்படிங்ற கான்பிடண்ட் கொடுத்தது சென்னை தான்.  அதே மாதிரி சென்னையில் வாழும் மக்களை பார்த்து நான் வியந்து இருக்கிறேன்.

இங்க இருங்கவங்க யாரும் சும்மாவே இருக்க மாட்டாங்க ஏதாவது ஒரு வேலை பார்த்துகிட்டே தான் இருக்காங்க. சென்னை வந்தா பொழச்சுக்கிடலாமுனு சொல்வாங்க, அது உண்மை தான். இங்க இருக்கவங்க ஏதாவது ஒரு வேலை பார்த்துகிட்டே இருப்பாங்க. நான் தினம் தினம் சென்னை பார்த்து வியக்கிறேன். 

சென்னையில் வடபழனி, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், எழும்பூர் அருங்காட்சியகம், பாரீஸ், தியாகராய நகர், வண்டலூர், மெரீனா பீச், பெசனட் நகர் பீச், இராயப்பேட்டை ஆகிய இடங்களுக்கு சென்றேன். பாரீஸ் போனா நிறைய பொருள் குறைந்த விலையில் வாங்கலாமுனு போயிட்டு ஒண்ணுமே வாங்கமால் வந்த நாட்கள் நிறைய. ஆனா சென்னையில் எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் என்றால் மெரீனா பீச் தான்.

 சென்னை மெரீனா பீச்க்கு சாயங்காலமாக கிளம்பி 29ஏ பஸ்ல  தான் போவேன். போகும் போது கூட்டம் அவ்வளவாக இருக்காது. திரும்பி வரும் போது நிறைய கூட்டமாக இருக்கும். அதுலை இடம் பிடிக்கிறதுக்கே ஒரு தனி திறமை வேண்டும் என நான் நினைச்சுப்பேன்.  கண்ணகி சிலைக்கிட்ட இறங்கி உள்ள  போவேன். நடக்க முடியாம அந்த மணலில் நடக்கிறதும் சுகமாக தான் இருக்கும். மாலையில் அடிக்கும் அந்த கடல் காற்று அப்படியே நம் முகத்தை தழுவி செல்லும். எனக்கு எவ்வளவு கவலை இருந்தாலும், அந்த கடல் அலை பார்க்கும் போதே மனத்திற்கு இதமாக இருக்கும். 

எல்லோருக்கும் சென்னை எப்படினு தெரியல ஆனா எனக்கு சென்னை எப்போதும் சந்தோஷத்தை மட்டுமே கொடுக்கிறது. இனியும் கொடுத்துக்கொண்டே இருக்கும்.  

  • இப்படிக்கு பாரதி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *