
‘கூலி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘கைதி-2’ படத்தை இயக்க இருக்கிறார்.
இந்நிலையில் நேற்று ( செப்டம்பர்-1) செய்தியாளர்களைச் சந்தித்து லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார்.
அப்போது அவரிடம், “AI தெரிந்தவர்களுக்குதான் இனி எதிர்காலம் இருக்கும் என்று சொல்கிறார்கள்.
சினிமாவில் AI ஆதிக்கம் அதிகமாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், ” AI ஆதிக்கம் எல்லாம் இருக்காது. AI உதவி வேண்டுமானால் சினிமாவில் இருக்கும்.
அது ஒரு டெக்னாலஜி. அதனுடைய உதவியைப் பயன்படுத்தி கொள்வதுதான் புத்திசாலித்தனம். அதனை எப்படி, எவ்வளவு பயன்படுத்திக்கொள்கிறோம் என்பது நமது கையில்தான் இருக்கிறது.
‘கூலி’ படத்தில் AI உதவியுடன்தான் ரஜினி சாரின் குரல் சேர்க்கப்பட்டது. “என்று கூறியிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து, சிலர் மியூசிக்கிற்கு AI-யை பயன்படுத்துகிறார்கள். நீங்களும் பயன்படுத்துவீர்களா? என்ற கேள்விக்கு, அதற்கெல்லாம் எனக்கு AI வேண்டாம். நான் அனிருத்தைப் பயன்படுத்திக்கொள்வேன்” என்றிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…