
மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், கோயிலுக்கு வந்த பெண் அளித்த நகை திருட்டு வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி இறந்த அஜித்குமாரின் தாயார் உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின்போது அஜித்குமார் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ விசாரணையை முடித்து ஆக. 20-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.