
மிசோரம் தலைநகர் ஐஸ்வாலை இணைக்கும் பைரபி – சாய்ரங் வரையிலான 51.38 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி செப்.13-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு மாநிலங்களின் மாற்றத்துக்கு இந்திய ரயில்வே குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. இத்தகைய திட்டங்களில் வடகிழக்கு மாநிலமான மிசோரம் தலைநகரை இணைக்கும் பைரபி – சாய்ராங் புதிய பாதை ரயில் திட்டமும் ஒன்றாகும். மிசோரம் மாநிலம் மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளுடனும் திரிபுரா, அஸ்ஸாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுடனும் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.