• August 31, 2025
  • NewsEditor
  • 0

கடந்த ஆண்டு முதல் ஏமன் நாட்டில் இருக்கும் ஈரான் ஆதரவு பெறும் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது இஸ்ரேல்.

சமீபத்தில் நடந்த தாக்குதலில் ஏமனில் ஹௌதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஆளும் அரசாங்கத்தின் பிரதமராக இருந்த அஹ்மத் அல்-ரஹாவி கொல்லப்பட்டுள்ளார் என ஹௌதிக்கள் அறிவித்துள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஹௌதியின் உயர்மட்ட தலைவர் இவர்.

கடந்த வியாழன் அன்று ஏமன் தலைநகர் சனாவில் நடந்த தாக்குதலில் அஹ்மத் அல்-ரஹாவி உடன் சில அமைச்சர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஹௌதி வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் குறித்த தகவல்கள் குறிப்பிடப்படவில்லை.

அஹ்மத் அல்-ரஹாவி

கிளர்ச்சிக் குழுவின் ரகசியத் தலைவர் அப்துல் மாலிக் அல்-ஹவுதி பேசிய உரை, காசாவின் நிலை மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ள அவர்களது தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.

அப்துல் மாலிக் அல்-ஹவுதி, அமைப்பின் யுத்திகள், கொள்கைகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து முடிவுகளை எடுக்கும் தலைவர். பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி சனா மற்றும் ஹௌதியின் பிற பகுதிகளில் மக்களின் குடிமை பிரச்னைகளை தீர்க்கும் பொறுப்பில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போரில் முன்னணி வகிக்கும் தலைவர் அல்ல என்றாலும், இவரது மறைவு அமைப்புக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த வியாழன் (ஆகஸ்ட் 27) அன்று, சனாவின் தெற்கு பகுதியில் உள்ள பழமையான கிராமத்தில் ஹௌதி தலைவர்கள் சந்திப்பு நடத்தியபோது இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன.

அவரது இறப்பைத் தொடர்ந்து துணை பிரதமர் முத்தஹம்மத் அஹ்மத் மிஃப்தா இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *