
கமல் ஹாசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கே.சி.ரவிதேவன் இயக்கும் படம், ‘சிங்கா’. அம்ரீஷ் இசையமைக்கிறார். கண்ணன் செல்வராஜ் வசனம் எழுதியுள்ளார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தில் சிங்கம் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில், நடிக்கிறது. இந்தப் படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன், தித்திர் ஃபிலிம் ஹவுஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகும் இந்தப் படம் பற்றி இயக்குநர் கே.சி.ரவி தேவன் கூறும்போது, "சவாலான இப்படத்தை அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி உருவாக்கி வருகிறோம். நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகள் சிலரை அணுகிய போது, நிஜ சிங்கத்துடன் நடிக்கத் தயங்கினர்.