
AI தொழில்நுட்ப ரேஸில் முன்னணி டெக் நிறுவனங்கள்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ரேஸில் இன்று அனைத்து முன்னணி டெக் நிறுவனங்களும் இறங்கியுள்ளன.
மெட்டா, ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கானோரைக் வேலையிருந்து வெளியேற்று, AI (செயற்கை நுண்ணறிவு) துறைகளில் அதிக திறமையாளர்களை பணியமர்த்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் ரிலைன்ஸ் நிறுவனம் கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்களுடன் இணைந்து ‘Reliance Intelligence’ என்ற பெயரில் அறிமுகமாகி, AI தொழில்நுட்ப ரேஸில் இறங்கியுள்ளது.
இந்த நிறுவனம் தொழில்நுட்பத் துறையோடு மட்டுமல்லாமல், கல்வி, மருத்துவம், வேளாண் போன்ற துறைகளிலும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசியிருக்கும் முகேஷ் அம்பானி, கூறியதாவது:
“இன்று, எங்கள் நீண்டகால தொழில் நட்பு கொண்ட கூகுளுடன் சேர்ந்து, செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் ஆழமான மற்றும் முழுமையான முயற்சியில் இறங்கப்போகிறோம் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
கூகுளின் முன்னணி கிளவுட் மற்றும் AI தொழில்நுட்பங்களுடன் இணைந்து, இந்திய அளவில் செயல்படுத்த ரிலையன்ஸின் செயற்கை நுண்ணறிவுத் திறனை உருவாக்கவுள்ளோம்.
இதன் மூலம், டெவலப்பர்கள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவனங்கள் விரைவாக புதுமைகளை உருவாக்கவும், அதிக பாதுகாப்புடன் செயல்படவும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் சென்றடையவும் திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.
இதுகுறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூறியதாவது:
“கூகுள் மற்றும் ரிலையன்ஸ் இணைந்து, ரிலையன்ஸின் அனைத்து தொழில்களையும் – எரிசக்தி மற்றும் ரிட்டெயில் துறையிலிருந்து தொலைத்தொடர்பு மற்றும் நிதிசேவைகள் வரை – செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மாற்ற திட்டமிட்டுள்ளோம்.

இந்த AI பயன்பாட்டை ஆதரிக்க, நாங்கள் இணைந்து ஜாம்நகர் கிளவுட் பகுதியை உருவாக்குகிறோம். இது ரிலையன்ஸுக்காகவே சிறப்பாக கட்டப்பட்டும், அர்ப்பணிக்கப்பட்டும் இருக்கும்.
இதன் மூலம், கூகுள் கிளவுட் வழங்கும் உலகத் தரச் செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி திறன்கள், ரிலையன்ஸின் மூலம் இயக்கப்பட்டு, ஜியோ நெட்வொர்க்கிலும் பல மாற்றங்களை கொண்டுவரும்” என்று அவர் கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs