
புதுடெல்லி: இந்தியா ஒருபோதும் தலைவணங்காது, பலவீனமாகவும் நிற்காது என்று அமெரிக்காவின் வரி உயர்வுக்கு பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பியூஷ் கோயல், “தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு இந்தியா தயாராக இருக்கிறது. ஆனால், இந்தியா ஒருபோதும் தலைவணங்காது, பலவீனமாகவும் நிற்காது. நாங்கள் தொடரந்து புதிய சந்தைகளைக் கைப்பற்றுவோம்.