
ஜெய், யோகி பாபு, ரீஷ்மா நானய்யா நடிக்கும் படத்துக்கு ‘ஒர்க்கர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
வினய் கிருஷ்ணா இயக்கும் இதில் நாகினீடு, பரத் கல்யாண், பிரவீனா, ஸ்ரீஜா ரவி, சசி லயா, வெங்கட் செங்குட்டுவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதை ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனம் சார்பில் எம்.ஷோபனா ராணி தயாரிக்கிறார்.
அஞ்சி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கி நடைபெற இருக்கிறது.