
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து கடந்த ஆண்டு இறுதியில் ஓய்வுபெற்ற ரவிச்சந்திரன் அஷ்வின், நேற்று (ஆகஸ்ட் 27), `சிறப்பான நாளில் சிறப்பான தொடக்கம்’ என்று ட்வீட் செய்து ஐ.பி.எல்லில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
அதேசமயம் வெளிநாட்டு டி20 லீக்குகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தனது யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அஷ்வின், “அடுத்த வருடம் ஐ.பி.எல்லில் விளையாடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
ஆனால், மூன்று மாதங்கள் ஐ.பி.எல் விளையாடுவது எனக்குச் சற்று அதிகம். அது எனக்குச் சோர்வாக இருக்கிறது.
தோனி போன்ற ஒருவரைப் பார்க்கும்போது எனக்குப் பிரமிப்பு ஏற்படுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.

உங்களுக்கு வயதாக வயதாக நீங்கள் ஐ.பி.எல்லில் விளையாடுவதற்கான ஆற்றல் குறைகிறது.
மூன்று மாதங்கள் கிரிக்கெட் விளையாடுவது என்பது எளிதானது அல்ல. நிறையப் பயணிக்க வேண்டும், போட்டிகளில் ஆட வேண்டும். உங்களின் உடலை மீண்டும் நார்மல் நிலைக்குக் கொண்டு வர வேண்டும்” என்று கூறினார்.
2008 முதல் 2015 வரை சி.எஸ்.கே-விலும் அதன்பிறகு பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய அணிகளிலும் ஆடிவந்த அஷ்வின் கடந்த (2025) சீசனில் மீண்டும் சி.எஸ்.கே-வுக்குத் திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…