• August 29, 2025
  • NewsEditor
  • 0

கடந்த 22.08.2025 அன்று வீட்டில் தவறி விழுந்த காரணத்தினால் தலையிலும், கைவிரலிலும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டு, உடனடியாக அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டது.

24.08.2025 அன்று மாலை அவர் உணவருந்தும்போது உணவுக்குழாயில் புரைஏறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, இரவு 10.30 மணிக்கு மேல்சிகிச்சை தேவைப்பட்ட நேரத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தற்போது மருத்துவ குழுவின் பரிந்துரைப்படி அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.

நல்லகண்ணு

இந்நிலையில் நல்லகண்ணு அவர்களின் உடல் நிலைக் குறித்துப் பேசியிருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தலையிலும், கைவிரலிலும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதால் ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் பாதிப்புகள் ஏதுமில்லை என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

அப்போலோ மருத்துவமனையிலிருந்து மருத்துவக் குழு வந்து ஆய்வு செய்து சென்றிருக்கின்றனர். தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார் நல்லகண்ணு அவர்கள்.

நுரையீரல் பகுதியில் புரை ஏற்பட்டபோது உணவுத் துகள்கள் அப்பகுதியில் அடைத்துக் கொண்டதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது அவருக்கு.

அதுவும் இப்போது சரிசெய்யப்பட்டு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருக்கிறார். சிறப்பு மருத்துவர்கள் குழு அவரை முழுமையாக குணப்படுத்த தீவிரமான கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *