
நடிகர் விஷால் தனது 48-வது பிறந்தநாளை சென்னையில் இன்று (ஆகஸ்ட்29) ஆதரவற்றோர் மற்றும் முதியோருடன் கொண்டாடி இருக்கிறார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் திருமணம் குறித்த கேள்வி எழுப்பப்ட்டது. அதற்கு பதிலளித்த அவர், ” எப்போது திருமணம் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு இன்று பிற்பகல் நல்ல செய்தியை அறிவிக்கிறேன்.
இந்த ஆண்டு இறுதிக்குள் எனது திருமணம் நிச்சயம் நடக்கும்” என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிக்கு, நடிகர் சங்கம் சார்பாக பாராட்டு விழா நடத்தப்படுமா?’ என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ” ஒருவர் 50 வருடங்கள் திரையுலகில் நீடித்து, அதுவும் சூப்பர் ஸ்டாராகவே தொடர்வது என்பதை உலக சாதனையாகவே நான் பார்க்கிறேன்.
தற்போது நடிகர் சங்க கட்டட வேலைகள் நடந்து வருவதால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
அதேநேரம் ரஜினி சாருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்ற உணர்வும் உள்ளது. விழா தொடர்பாக பரிசீலித்து வருகிறோம்” என்றுகூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…