• August 29, 2025
  • NewsEditor
  • 0

இந்த மாதம் 15-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு நடந்தது.

அடுத்ததாக, 18-ம் தேதி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்ப நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்கா சென்று ட்ரம்பைச் சந்தித்தார்.

இரு சந்திப்புகளின் மையமும் ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் தான்.

இந்தச் சந்திப்புகளில், இதுவரை முரண்டு பிடித்துக் கொண்டிருந்த புதின், ஜெலன்ஸ்கியைச் சந்திக்க தயார் என்று ஒப்புக்கொண்டார். ஜெலன்ஸ்கியும் ஏற்கெனவே புதினை சந்திப்பது ‘ஓகே’ என்று தெரிவித்தார்.

விரைவில், இருவரின் சந்திப்பும் நடக்க உள்ளது. ஆனால் அது எந்த இடத்தில் நடைபெறும் என்பது இன்னமும் முடிவாகவில்லை.

ட்ரம்ப், ஜெலன்ஸ்கி சந்திப்பு

மோதல்

இப்படிக்கு ஒரு பக்கம் போர் நிறுத்தம் பேச்சுவார்த்தைகள் மற்றும் முயற்சிகள் சென்றுகொண்டிருக்க, இன்னொரு பக்கம் மாறி மாறி இரு நாடுகளும் மோதிக் கொண்டிருக்கின்றன.

உக்ரைனின் தலைநகரான கிய்வ் மீது ரஷ்யா சமீபத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைனும் ரஷ்யாவுக்கும் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

ட்ரம்ப் என்ன நினைக்கிறார்?

இது குறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லெவிட் கூறுகையில்,

“அதிபர் ட்ரம்ப் இந்தச் செய்திகள் குறித்து மகிழ்ச்சியாக இல்லை. ஆனால் இது அவருக்கு ஆச்சரியமாகவும் இல்லை.

இந்த இரு நாடுகளும் நீண்டகாலமாக போர் புரிந்து வருகின்றன.

ரஷ்யா கிய்வ் மீது தாக்குதல் நடத்தியது. உக்ரைன் சமீபத்தில் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷ்யா உக்ரைன் போர்

கிய்வ் மீதான தாக்குதல் குறித்து அதிபர் கருத்து தெரிவிப்பார். இந்தப் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிய வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துவார்.

இரு நாடுகளும் தாங்களாகவே இந்தப் போரை நிறுத்த தயாராக இல்லை. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் பிறரை விட மிகத் தீவிரமாக அதிபர் ட்ரம்ப் செயலாற்றி வருகிறார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *