
ராமேசுவரம்: கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் கச்சத்தீவு உரிமை தொடர்பாக நடிகர் விஜய் கூறிய கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.